ரயிலில் கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது

சேலம்: சேலம் வழியே சென்ற, தன்பாத் - ஆலப்புழா ரயிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு சேலம் ரயி ல்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கருப்பூர் - சேலம் ஸ்டேஷன்கள் இடைப்பட்ட பகு-தியில் நடத்திய சோதனையில், முன்பதிவற்ற பெட்டியின் கழிப்பறை அருகே கிடந்த பையை சோதனை செய்ததில், 6 கிலோ கஞ்சா இருந்தது. அந்த பெட்டியில் இருந்த பயணியரிடம் நடந்த விசாரணையில் ஒடிசா மாநிலம் பாலஞ்ஜிர் மாவட்டத்தை சேர்ந்த அணில்ராணா, 23, கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. பின் கஞ்சாவை பறிமுதல் செய்து, ஒடிசா வாலிபரை கைது செய்-தனர்.

Advertisement