2026 மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி; திருநள்ளாறு கோவிலில் அறிவிப்பு

காரைக்கால் : காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என, பஞ்சாங்கம் வாசித்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காரைக்கால், திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அணுக்கரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.
சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில், இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனை நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்து, அறிவித்தனர்.
சிவாச்சாரியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும்
-
நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்; மருத்துவமனையில் பதற்றம்
-
தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!