பிறந்த 5 நாளில் குழந்தை பலி

ஓசூர்: தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி, 30. கட்டட மேஸ்திரி; இவரது மனைவி கங்காதேவி. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கங்காதேவிக்கு கடந்த, 5 நாட்களுக்கு முன், ஓசூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

சிகிச்சையில் இருந்த அவர் கடந்த, 11 இரவு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து துாங்க வைத்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:50 மணிக்கு பார்த்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அசைவின்றி இருந்தது. டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்தது தெரியவந்தது. ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரிக்கிறார்.

Advertisement