இது எங்கள் உட்கட்சி விவகாரம்: அன்புமணி சொல்வது இதுதான்!

சென்னை: ''இது எங்கள் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசிக்கொள்வோம்'' என தலைவர் பதவி நீக்கம் குறித்து நிருபர்கள் சந்திப்பில் பா.ம.க.,வின் அன்புமணி தெரிவித்தார்.
பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக, கடந்த 10ம் தேதி ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் 'இனி நானே தலைவராக செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார்' என்றார். இது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ராமதாஸ், 'நல்லதே நடக்கும்' என்று கூறியது, அவர்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது. ஆனாலும், அவரின் மகன் முரண்டு பிடிப்பதால், கட்சி நிர்வாகிகள் மீண்டும் சமரச முயற்சியை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் மே 11ம் தேதி பாமக சார்பில் சித்திரை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து அன்புமணி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர், நிருபர்கள் சந்திப்பில் பா.ம.க., தலைவர் பதவி விவகாரம் குறித்து நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: இது எங்கள் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசிக்கொள்வோம். ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அவரது கொள்கைகளை நிலைநாட்டவும், பா.ம.க.,வை ஆளும் கட்சியாக மாற்றவும் அனைவரும் சேர்ந்து உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
வேலூரில் 150 ஹிந்துக்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமை கோரும் வக்ப் வாரியம்: கிராம மக்கள் அதிர்ச்சி
-
பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
-
'சாட்டை' துரைமுருகன் யுடியூப் சேனலுக்கும் நா.த.க.,வுக்கும் தொடர்பில்லை: சீமான்
-
பிரீமியர் லீக்: பஞ்சாப் அணி பேட்டிங்
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
காவல்துறை, நீதி வழங்கல் செயல்பாடு: டாப் 5 இடம் பிடித்த தென்மாநிலங்கள்