வேலூரில் 150 ஹிந்துக்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமை கோரும் வக்ப் வாரியம்: கிராம மக்கள் அதிர்ச்சி

61

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் வசித்து வரும் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் வந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமம் உள்ளது. இங்கு 150 ஹிந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.


இவர்களது நிலத்தை, தங்கள் நிலம் என்று வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அங்குள்ள மசூதி மற்றும் தர்ஹாவின் பராமரிப்பாளர் சையத் சதாம் என்பவர், கிராம மக்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில், ஒட்டு மொத்த நிலமும் வக்ப் வாரியத்திற்கு சொந்தம். இதனால், அனைவரும் வாடகை கொடுக்க வேண்டும். அல்லது காலி செய்து வக்ப் வாரியத்திற்கு வாடகை கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆங்கில டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.

மனு



இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பிறகு அவர்கள் கூறுகையில். நான்கு தலைமுறையினராக இங்கு தான் வசிக்கிறோம். எங்களுடைய விவசாய நிலம் இங்கே தான் இருக்கிறது. திடீரென இந்த நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது எனக்கூறுவது எப்படி நியாயம் ஆகும். இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. பல வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், தர்ஹாவிடம் கையெழுத்து பெற சொல்கின்றனர். அவர்களிடம் கேட்டால் ரூ.1 லட்சம் பணம் கேட்கின்றனர். இதற்கு நாங்கள் எங்கு போவோம். இதனால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.


இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் என்பவர் கூறுகையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மசூதி ஒன்றின் நிர்வாகி, இந்த நிலம் எங்களுக்கு சொந்தமான இடம். அதற்கு வாடகை கொடுக்க வேண்டும் அல்லது காலி செய்ய வேண்டும். வக்ப் வாரிய சொத்து என தெரிவித்து உள்ளார்.

பட்டா வேண்டும்



இக்கிராம மக்கள் 3 - 4 தலைமுறையினராக வசிக்கின்றனர். நிலம் கிராம மக்களுக்கு சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கிய ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் திடீனெர சர்வே எண் 333/1 வக்ப் வாரிய சொத்து என அறிவிக்கின்றனர். கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். மக்ளுக்கு பட்டா கொடுக்க வேண்டும். நாடு முழுதும் வக்ப் வாரிய சொத்து என அறிவித்து ஹிந்துக்கள் வசிக்கும் கோவில் இருந்த பகுதிகள் அனைத்தும் எங்களுக்கு என சொந்தம் எனக்கூறுகின்றனர். இது சட்டவிரோதம். கலெக்டர் ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆவணம் உள்ளது



இது தொடர்பாக மசூதி நிர்வாகி சையத் சதாம் கூறுகையில், '' நிலம் வக்ப் சொத்து என 1959ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. வக்ப் சொத்து என்பதற்கு ஆவணம் உள்ளது. அரசு ஆவணங்கள், பட்டா, சிட்டாவில் நிலங்கள் அனைத்தும் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது எனக்கூறப்பட்டு உள்ளது. அதனால் உரிமை கோருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement