திருமணத்தின் மூலம் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் சிக்கல்; டிரம்ப் நிர்வாகம் வைத்த செக்

9

வாஷிங்டன்: அமெரிக்க குடிமகன்கள் அல்லது க்ரீன் கார்டு பெற்றவர்களை திருமணம் செய்பவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறைகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது.


முன்பெல்லாம் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெற்றவர்களையோ திருமணம் செய்தால், உடனடியாக அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடும். குடியுரிமை பெறுவதற்கான இன்டர்வ்யூ நடைமுறைகள் இல்லாமல், அந்நாட்டு குடிமகன் ஆகிவிடலாம்.

ஆனால், தற்போது அந்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி வரும் டிரம்ப் நிர்வாகம், திருமணத்தின் மூலம் நாட்டின் குடிமகன்களாவதிலும் செக் வைத்துள்ளார்.

அமெரிக்க குடிமகனின் வாழ்க்கை துணைவியர், குடியுரிமை பெற ஐ-130 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்திற்கு அனுமதி கொடுக்க 14 மாதங்களாகும். அதன்பிறகு, அமெரிக்க அதிகாரிகளின் இன்டர்வ்யூக்கு மூன்றரை மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும். ஆக மொத்தம் 17 முதல் 20 மாதங்களாகலாம்.

அதேபோல, அமெரிக்க க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவியர், எப்2ஏ க்ரீன் கார்டு பெறும் நடைமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

துணைவியர்கள் க்ரீன் கார்டு பெற 3 முதல் 4 ஆண்டுகள் காலம் தேவைப்படும்.

வாழ்க்கை துணைவியர்கள் எச்-1பி வேலை விசா பெற்று, ஏற்கனவே அமெரிக்காவில் வசித்து வந்தால், அவர்கள் க்ரீன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். அவர்களிடம் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றதல் துறை அதிகாரிகள் இன்டர்வ்யூ செய்வார்கள், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement