தமிழ்ப்புத்தாண்டு; பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் வாழ்த்து

புதுடில்லி: தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும் இந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மகிழ்ச்சியான தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும், அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதமிழ்ப்புத்தாண்டு திருநாளில் தமிழகத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புனிதமான சடங்குகளுடன் ஒரு நம்பிக்கையோடு புத்தாண்டை நாம் வரவேற்கும் போது, இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அனைத்து நன்மைகளையும் அளிக்கட்டும்.
பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர், அண்ணாமலை
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கும் ஆண்டாகவும், அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் பெருகும் ஆண்டாகவும், புதிய தொடக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் ஆண்டாகவும் அமையட்டும்.
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.












மேலும்
-
வேலூரில் 150 ஹிந்துக்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமை கோரும் வக்ப் வாரியம்: கிராம மக்கள் அதிர்ச்சி
-
பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
-
'சாட்டை' துரைமுருகன் யுடியூப் சேனலுக்கும் நா.த.க.,வுக்கும் தொடர்பில்லை: சீமான்
-
பிரீமியர் லீக்: பஞ்சாப் அணி பேட்டிங்
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
காவல்துறை, நீதி வழங்கல் செயல்பாடு: டாப் 5 இடம் பிடித்த தென்மாநிலங்கள்