குஜராத்தில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: கடலோர காவல்படை நடவடிக்கை

24


ஆமதாபாத்: குஜராத் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடத்துவதற்கு தயாராக இருந்த ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



குஜராத் மாநிலம், கடற்கரை பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடற்கரை பகுதியில், இந்திய கடலோர காவல்படையினர், குஜராத் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது 300 கிலோ போதைப்பொருள் கடத்துவதற்கு தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ.1,800 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.



ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் நடந்த சோதனையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது முறியடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து குஜராத் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement