பாட்டி-பேரன் கொலையில் 2 பேரிடம் தீவிர விசாரணை


பாட்டி-பேரன் கொலையில்
2 பேரிடம் தீவிர விசாரணை
சத்தியமங்கலம்:
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனுாரை சேர்ந்தவர் சிக்கம்மா. இவரின் பேரன் ராகவன், ௧௨; இருவரும், ௧௨ம் தேதி நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கைது செய்யாமல், உடல்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறவினர்கள், தாளவாடி போலீசார், எஸ்.பி., உள்ளிட்டோரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இரு தனிப்படை அமைத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை தொடர்பாக போலீசார், இருவரை பிடித்து ரகசிய இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement