அய்யப்பன் தங்க டாலர் சபரிமலையில் விற்பனை

சபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷு தினத்தையொட்டி, கடவுள் அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை நேற்று துவங்கியது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, கடவுள் அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்களை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை துவங்கியது.
இந்நிலையில், நேற்று விஷு தினத்தையொட்டி கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அய்யப்பன் உருவம் பொறித்த டாலர் விற்பனையை, மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக, ஆன்லைனில் விண்ணப்பித்த 100 பக்தர்களுக்கு இந்த டாலர்கள் வழங்கப்பட்டன. ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் ஒருவர், அமைச்சர் வி.என்.வாசவனிடம் இருந்து முதல் தங்க டாலரை பெற்றுக் கொண்டார்.
அய்யப்பன் தங்க டாலர், 2, 4 மற்றும் 8 கிராம் என, மூன்று எடைகளில் கிடைக்கிறது. 2 கிராம் தங்க டாலர் - 19,300 ரூபாய்; 4 கிராம் - 38,600 ரூபாய்; 8 கிராம் - 77,200 ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த டாலர்களை வாங்க விரும்புவோர், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்