'மோடியை மறக்க மாட்டோம்'

சென்னை: ''பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்க மாட்டோம்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அவர் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:



விஜயகாந்த் திரை உலகிலும், அரசியலிலும் உயர்ந்த ஆளுமை கொண்டவர் மட்டுமின்றி, பலரது அன்பையும், மரியாதையையும் பெற்றவர். பிரதமர் மோடிக்கும், விஜயகாந்திற்கும் இடையிலான உறவு, அரசியலையும் தாண்டிய உறவு.

விஜயகாந்தை, 'தமிழகத்தின் சிங்கம்' என, பிரதமர் அன்பாக அழைப்பார். அவரது உடல்நலம் குறித்து, ஒரு சகோதரரை போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார்.

உலகின் எந்த இடத்தில், என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று கூறினார். நான் உங்கள் மூத்த சகோதரனை போல் என பிரதமர் கூறியதை, எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம். அதோடு விஜயகாந்த் -- பிரதமர் நட்பு என்பது, மரியாதையிலும், அன்பிலும் கட்டப்பட்ட ஒன்று.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement