'ஜில்' பீருக்கு அதிக பணம் வசூல்; வழக்கம் போல டாஸ்மாக் எச்சரிக்கை

சென்னை : தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பத்தை தணிக்க, வாடிக்கையாளர்கள் மது வகைகளுக்கு பதிலாக, பீர் பாட்டில்களை அதிகம் வாங்குகின்றனர்.
இதனால், தினமும் சராசரியாக, 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது, ஒரு லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, கடை ஊழியர்கள், குளிர்ச்சியான பீர் பாட்டிலுக்கு, 20 - 30 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, டாஸ்மாக் பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:
மதுக் கடைகளில் குளிர்ச்சியான பீர் வழங்க, 'கூலர்'கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கடைகளுக்கான மின் கட்டணத்தையும், நிர்வாகமே வழங்குகிறது.
எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு பீர் விற்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது, இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
-
முதியவர் மீது 'போக்சோ'