முதியவர் மீது 'போக்சோ'

கடலுார் ; சீர்காழியைச் சேர்ந்தவர் முருகேசன், 55; இவர் நேற்று முன்தினம் இரவு கடலுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது அருகிலுள்ள வீட்டில் இருந்த 5 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement