'கிக் பாக்சிங்'  சாம்பியன் போட்டி

மதுரை: மதுரையில் மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பாயின்ட் பைட், லைட் கான்டாக்ட், லோ கிக், கிக் லைட், மியூசிக்கல் பார்ம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. மதுரை டேக்வாண்டோ அகாடமி, வலிமை ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 20 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை வென்றனர்.அவர்களை மாவட்ட கிக் பாக்சிங் சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ்குமார், தலைமை பயிற்சியாளர் கார்த்திக், பயிற்சியாளர்கள் பிலால், நவீன், நரேஷ், விஜய் அருணாச்சலம் பாராட்டினர். தங்கம் வென்ற மாணவர்கள் சென்னையில் நடக்கும் மாநில கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

Advertisement