பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை

பந்தலூர்:பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.


அதில் மூலக்கடை என்ற இடத்தில், வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே சாலையோரம் இருந்த இரண்டு பெரிய மரங்கள் முறிந்து, மின்கம்பியில் விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரியத்தினர் மற்றும் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் இணைந்து மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினார்கள்.


இதனால் பந்தலூர் - அய்யன்கொல்லி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பிகள் அருந்ததால் இந்த பகுதி முழுவதும் மின்சப்ளை முழுமையாக துண்டிக்கப்பட்டது.மின் பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement