ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

1


சென்னை: ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரமணிய கவுசிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இதனை நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு தடை விதித்துள்ள 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரி முதல் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தியர் மலை வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி எடுத்துச் சென்றால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.வாகனங்களுக்கு பறிமுதல் பிளாஸ்டிக் கொண்டு செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்க வேண்டும்.


நீலகிரியில் கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பொருட்களை மக்கும் பொருட்களில் வைத்து வழங்க வேண்டும். குடிநீர் பாட்டில்கள், பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம். பொது இடங்களில் குப்பைகள் சேர்வதை தடுக்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜூன் 6 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement