'கூரியர்' வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

பெண்ணாடம் : 'கூரியர்' என எழுதப்பட்ட டாடா ஏஸ் வேனில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.கொல்லத்தங்குறிச்சி ரயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் 'கூரியர்' என எழுதப்பட்டிருந் டாடா பிக்கப் வேனில் (டிஎன் 05 - சிஆர் 1107) வெளி மாவட்டத்திற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்வதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில், போலீசார் சம்பந்தப்பட்ட வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அந்த வேனில் 50 கிலோ எடையுள்ள 32 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வேன் டிரைவர் கரூர் மாவட்டம், குளித்தலை அஸ்லாம், 35; அரியலுார் மாவட்டம், செந்துறை பொன்னன், 40; ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், அரியலுார் மாவட்டத்தில் நடத்தி வரும் கோழிப் பண்ணைக்கு அரிசி வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, வேன் மற்றும் வேனில் கொண்டு வரப்பட்ட 1,600 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவினரிடம் பெண்ணாடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும்
-
நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்; மருத்துவமனையில் பதற்றம்
-
தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!