தென்காசியில் மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்து கொலை; 4 பேர் கைது

16

திருநெல்வேலி: தென்காசியில் மனைவி கண் முன்னர், கணவனை கொன்ற நான்கு பேர் கொண்ட கும்பல், அவரது தலையை துண்டித்துக் கொண்டு தப்பிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரமேஷ், ஹரிஹரசுதன், செண்பகம், மணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


@1brதென்காசி மாவட்டம் கீழப்புலியூரில், ரேஷன் கடை அருகே குமாரசாமியின் மகன் குத்தாலிங்கம் (35) .தனது மனைவியுடன் நின்றுகொண்டிருந்த போது, அரிவாளுடன் வந்த நால்வர் கொண்ட கும்பல் அவரை வெட்டி, தலையை துண்டித்துக் கொண்டு தப்பியோடியது.


தலை, அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரம் அம்மன் கோயில் அருகே விட்டுவிட்டு கும்பல் தப்பியது. பழைய கொலை சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் நடந்திருக்கலாம் இக்கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 பேர் கைது




இச்சம்பவம் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரமேஷ், ஹரிஹரசுதன், செண்பகம், மணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement