நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்

டேராடூன்: "நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்," என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம், காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில் சாம் பிட்ரோடா, சுமன் துபே மற்றும் பல நிறுவனங்கள் உட்பட பலரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வழக்கு ஏப்ரல் 25 அன்று டில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டேராடூனில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டங்களைத் தொடங்கியுள்ளது.
நேஷனல் ஹெரால்ட் வழக்கில், காங்கிரஸ்காரர்கள் மிகக் கீழ் மட்ட அரசியல் செய்கிறார்கள். இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. இது ஒரு ஊழல் வழக்கு. அதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Advertisement