தினமலர் செய்தியால் புதிய பாலம்

மேலுார்: நா.கோவில்பட்டி மற்றும் அழகுநாதபுரம் பகுதியில் வசிக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசதிக்காக 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெரியாறு கால்வாய் பாலம் சிதிலமடைந்தது. அதனால் பள்ளி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஆபத்தான நிலையில் சென்று வந்தன.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நீர்வளத்துறையினர் புதிய பாலம் கட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement