கவர்னருக்கு நேரம் சரியில்லை: அமைச்சர் மகேஷ் கணிப்பு

சென்னை : ''தமிழக கவர்னர் ரவிக்கு, கடந்த 8ம் தேதியில் இருந்து நேரம் சரியில்லை,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
கவர்னர் ரவிக்கு, கடந்த 8ம் தேதியில் இருந்து நேரம் சரியில்லை; காரணம், அவர் பேச்சு அப்படி உள்ளது. அவர் எந்த மாநிலத்திலிருந்து வருகிறார். அங்கு, கல்விக்கான திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து, நம் பிள்ளைகளைப் பற்றி பேசுவது நல்லது.
உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவது குறித்து கவர்னர் இஷ்டத்துக்கும் கருத்து சொல்கிறார். பெறுபவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். நெல்லை பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து, முழுமையாக தகவல் கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக, அறிவியல், கலை, இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறோம். தென் மாவட்டங்களில், சிறப்பு திட்டங்களை செயல்படுத்த, தயாராக உள்ளோம். பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது, விரிவான அறிவிப்பு வெளியாகும்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க காரணம், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் நடத்த திட்டமிடும் ஹிந்தி திணிப்புதான். என்.சி.இ.ஆர்.டி., தற்போது, ஆங்கில வழி பாடங்களுக்கு ஹிந்தி பெயரை சூட்டிஉள்ளது. அதன் கையில், தேசிய கல்வி சென்றால், டில்லியில் அமர்ந்து பாடப்புத்தகத்தை வடிவமைப்பவர் கூறுவதைத்தான், நம் குழந்தைகள் படிக்க வேண்டும்.
இது, கடிகார முள்ளை பின்னோக்கி இழுப்பதற்கு சமம். அதனால்தான், அதை மசோதா நிலையிலேயே எதிர்த்தோம். இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி