நெல் கொள்முதலில் எடை மோசடி விவசாயிகள் சாலை மறியல்

செஞ்சி : செஞ்சி அருகே நெல் கொள்முதலில் எடை மோசடி செய்ததாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த மேல்பாப்பாம்பாடியில் நேற்று நெல் வியாபாரி ஒருவர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தார்.
எடை போட்டதில், சந்தேகம் அடைந்த விவசாயிகள் வேறு எடை மிஷனில் சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் அதிக எடையில் நெல் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விவசாயிகள் நேற்று மாலை 6:20 மணியளவில் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் மேல்பாப்பாம்பாடி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா, சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயி மற்றும் வியாபாரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் 6:50 மணியளவில் மறியலை கைவிட்டனர்.
இதனால் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்