வீண் விளம்பரத்துக்கு செலவு செய்வதை நிறுத்தி நிர்வாகத்தில் கவனம் செலுத்தவும்: அண்ணாமலை

சென்னை: 'வீண் விளம்பரங்களுக்கு, மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் மாநில நிர்வாகத்தில், முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான், தி.மு.க., துவக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும், பிரிவினையை துாண்டுவதாக உள்ளது. அதன் ஒரு பகுதி தான், மாநில சுயாட்சி என்ற முகமூடி. தமிழகத்தில் சீரழிந்த சட்டம் - ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதை பொருட்களின் புழக்கம், போலீசாருக்கே பாதுகாப்பின்மை என, தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், மக்கள் ஆட்சியை பாராட்டுவதாக நினைத்து, கனவுலகில் வாழ்கிறார்.
தேவையற்ற விளம்பர நாடகங்களில், மக்கள் வரி பணத்தை வீணடிக்கும் ஸ்டாலின், மீண்டும் ஒரு முறை மக்கள் வரி பணத்தை வீணடிக்க, மத்திய அரசுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழு அமைப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த, 2021ல் ஆட்சிக்கு வந்தபின், தி.மு.க., அரசு அமைத்துள்ள பல குழுக்களில் இதுவும் ஒன்று. மக்களின் வரிப் பணத்தை, இப்படி வீணடிப்பதற்கு முன், கடந்த நான்கு ஆண்டுகளில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கு, எவ்வளவு நிதி செலவிடப்பட்டு உள்ளது என்பதையும், அக்குழுக்களினால் என்ன தீர்வு கிடைத்துள்ளது என்பதையும், ஸ்டாலின் முதலில் அறிவிக்க வேண்டும்.
ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை மறைக்க, வாரம் ஒரு நாடகமாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்டாலின், தி.மு.க.,வின் பிரிவினைவாதத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதை உணர வேண்டும். வீண் விளம்பரங்களுக்கு, மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





மேலும்
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி