தி.மு.க., மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் தி.மு.க., மாணவரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.

நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி வீடு வீடாகச் சென்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை உறுப்பினர்களாக கட்சியில் இணைத்தார்.

ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், சேர்மன் ஓம் சிவசக்திவேல், இளைஞரணி செயலாளர் நிர்மல் ராஜ், பேரூராட்சி துணைச் சேர்மன் ஜோதி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயபாபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ்.

நகர பொருளாளர் நாசர், கவுன்சிலர்கள் செந்தில் முருகன், பாக்கியராஜ், பாபு, சதாம், நகர இளைஞரணி செயலாளர் சுரேஷ், அறங்காவலர் குழு தலைவர் ராஜாராமன், இளைஞர் அணி நிர்வாகிகள் சுலைமான், சிறுவாமணி, ராஜ்குமார், குணசேகர், சிவா, முன்னாள் நகர செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement