உதவியாளர் பணியிடத்திற்கு 27ம் தேதி முதல்நிலை தேர்வு

புதுச்சேரி: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் பணியிடத்திற்கான முதல்நிலைத் தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் உதவியாளர் பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு வரும் 27ம் தேதி, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் நடக்கிறது.

இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, இன்று (16ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக, ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement