புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சமூக பணித்துறை, சமூக அறிவியல்

மற்றும் சர்வதேச ஆய்வுகள் பள்ளி, மத்திய அரசின் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் 'தலைமுறைகளை இணைக்கும் உறவுகள் மற்றும் முதியோரின் மனநலத்தைப் புரிந்து கொள்ளும் பாதைகள்' தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

சமூக பணித்துறை தலைவர் சங்கர் நாராயணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஷாஹின் சுல்தானா நோக்கவுரை ஆற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு கருத்தரங்கை துவக்கி வைத்து, முதியோரின் மனநல தேவைகளை கல்வி மற்றும் கொள்கை விவாதங்களின் மூலமாகப் புரிந்து கொள்வது அவசியமானது என்றார்.

ஹைதராபாத் ஹெரிடேஜ் அறக்கட்டளை இயக்குனர் கணகதரன் முதியோர் காப்பீட்டுத் திட்டங்களின் சட்டவியல், பரிந்துரைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நிம்ஹான்ஸ், பெங்களூரு நிறுவன மனநல சமூகப் பணித்துறை பேராசிரியர் திருமூர்த்தி, முதியோர் பராமரிப்பின் உளவியல் பார்வையை முன்வைத்தார். ஜிப்மர் சமூக மருத்துவத் துறையின் ஜுனதா பானு, சமூக ஆய்வுகளின் அடிப்படையில் முதியோர் நலன் குறித்து பேசினார். இதில், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், சமூகத் துறையின் முன்னணி நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement