ஓய்வு பேராசிரியர் சங்கம் ஆலோசனை
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக மாவட்ட கிளையின் பொதுக்குழுக் கூட்டம் மூட்டா அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி செயலறிக்கை வாசித்தார்.
மாநில பொதுச் செயலாளர் மனோகரன், துணைத் தலைவர் குணவதி, பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், லட்சுமணன், அரவிந்த், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தனியார் உதவிபெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிமேம்பாடு திட்டத்தை, அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கு மேம்படுத்தியது போல மேம்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பல்கலைகளுக்கு முதல்வர் வேந்தர் ஆன நிலையில், நலிந்த நிலையில் உள்ள பல்கலைகளை துாக்கி நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எட்டாவது ஊதியக் குழுவில் ஓய்வூதியர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
மேலும்
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்