மதுரையில் ஏப்.26 முதல் கிராமிய ஒலிம்பிக் போட்டி

மதுரை : மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு மியூசியத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு ஏப். 26 முதல் மே 3 வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மதுரை கிராமிய ஒலிம்பிக் எனும் தலைப்பில் பல்வகை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஏப். 26 ல் பல்லாங்குழி, 28 ல் தாயம், 29 ல் தட்டாங்கல், 30 ல் கிட்டிப்புல், மே 1 ல் கோலிக்குண்டு, 2 ல் நொண்டி, 3ல் பம்பரம் விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறத. ஆர்வம் உள்ளவர்கள் 97900 33307 வாட்ஸ் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.

அரசு மியூசியத்திற்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டிற்கு ரூ.100 வசூலிக்கப்படும். வயது வரம்பு கிடையாது என மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertisement