அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்: வி.எச்.பி.,

18

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, விஸ்வ ஹிந்து பரிஷத் போராட்டம் தொடரும் என, மாநில பொதுச்செயலர் பாலமணிமாறன் கூறினார்.


விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி: அமைச்சர் பொன்முடியின் பேச்சு காணொளியில் வந்ததும், விஸ்வ ஹிந்து பரிஷத் உடனடியாக இரண்டு அறிக்கையை வெளியிட்டது. அவர், அமைச்சர் பதவியில் இருந்து, உடனே நீக்கப்பட வேண்டும்; பகிரங்கமாக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டது.


உடனே, அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஏனென்றால், அவர் பேசிய பேச்சுகள் விவரிக்க இயலாதவை.
Latest Tamil News

ஒவ்வொரு ஹிந்துவையும், பெண்களையும் புண்படுத்த கூடியதாகும். அவர், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தமிழக முழுதும் தொடரும். இவ்வாறு பாலமணிமாறன் கூறினார்.

Advertisement