வக்ப் திருத்த சட்டத்திற்கு முழு ஆதரவு: தமிழ் மாநில முஸ்லீம் லீக் அறிவிப்பு

சென்னை : “முஸ்லிம் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், வக்ப் திருத்த சட்டத்தை வரவேற்கிறோம்,” என, தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: வக்ப் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும், சட்ட ரீதியான பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கவும், வக்ப் திருத்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'உம்மத்துக்கான வக்ப்' எனும் மாநில அளவிலான இயக்கத்தை துவக்கி உள்ளோம்.
தமிழகத்தில், பல உயர் மதிப்புள்ள வக்ப் சொத்துக்கள், சட்ட ரீதியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. பதிவு செய்யப்பட்ட வக்ப் சொத்தாக இருந்தும், சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், அவை அரசியல் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும். தமிழகம் முழுதும் உள்ள வக்ப் நிலங்களை, விரிவான 'டிஜிட்டல் அளவீடு' செய்ய, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இதன் வாயிலாக, பாரம்பரிய வக்ப் சொத்துக்களை, தனி நபர்களின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியும். மேலும், வக்ப் சொத்துக்கள் மதம், தொண்டு மற்றும் சமூக நலன்களுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
வக்ப் திருத்த சட்டத்தை, உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். வக்ப் சர்ச்சைகளை தீர்க்க, விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்த சட்டம், பெரும் உதவியாக இருக்கும், இந்த சட்டத்தை வரவேற்பதோடு, முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில், மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட தி.மு.க., தலைவர்கள், சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இவர்களின் ஊழல் மிகப்பெரியது. டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் நிலைமை, ஸ்டாலினுக்கும் வரும். தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் நிகழும்.
- ஷேக் தாவூத்,
நிறுவன தலைவர், தமிழ் மாநில முஸ்லீம் லீக்






மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
-
முதியவர் மீது 'போக்சோ'