காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி

காரைக்கால் : காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் உயிரிழந்தார்.

காரைக்கால், சின்ன கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 65; இவர், நேற்று காலை டீக்கடைக்கு செல்ல பாரதியார் சாலை நித்தீஸ்வரன் கோவில் அருகில் நடந்து சென்ற போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் செல்வராஜ் மீது மோதியது.

இதில் முன் சக்கரம் சிக்கி, செல்வராஜ் அதே இடத்தில் இறந்தார்.

தகவலறிந்த நகர போக்குவரத்து போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் கிரேன் டிரைவர் மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்ராஜ், 24 , என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement