தீயணைப்புத்துறையினர் நீத்தார் நினைவு தினம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்தில் நடந்த நீத்தார் நினைவு தினத்தில் மாவட்ட அலுவலர் அப்பாஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஏப்.,14 முதல் ஒரு வாரம் தீத்தொண்டு நாள் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், மருத்துவமனை, பள்ளிகள், கல்லுாரிகள், தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்த ஆண்டு விழிப்புணர்வு வாசகமாக தீவிபத்தில்லா இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்' என்ற வாசகத்தின் படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
சாயல்குடி
சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ தொண்டு வார விழா நடந்தது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீயணைப்பு துறையில் பணியில் இருந்த போது உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனுசரிக்கப்பட்டது. சாயல்குடி நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நினைவுத்துாணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஏப்., 14 முதல் 20 வரை அனுசரிக்கப்படுகிறது. சாயல்குடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பொது மக்களுக்கு தீ விபத்துக்கள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்புத் துறையினர் வழங்கினர்.
மேலும்
-
வடபழனியில் 'கேண்டீன்' இடிப்பு எம்.எல்.ஏ., ஆட்கள் அடாவடியா?
-
வழிப்பறி திருடர்கள் இருவர் கைது
-
எர்ணாவூர் முருகன் கோவிலில் கும்பாபி ேஷகம் கோலாகலம்
-
டவர் பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு சிரமம்
-
தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு; வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு
-
தாயின் பூர்வீக கிராமத்து கோவில் சீரமைத்த நடிகர் பிரபுதேவா