தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு; வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி; சோமண்டார்குடியில் வேளாண் கல்லுாரி மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிர்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் தங்கி கிராமப்புற வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், விவசாய நிலங்களில் இயற்கை முறையிலான தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் தக்காளி, கத்திரிக்காய், மிளகாய் போன்ற தோட்டக்கலை பயிர்களை நடவு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வேளாண் கல்லுாரி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தலைமையாசிரியர் கந்தசாமி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு