கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

பெங்களூரு : மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கர்நாடகாவின் உட்பகுதியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
நேற்று மாலையில் பெங்களூரு சிவாஜிநகர், வித்யாரண்யபுரா, எலஹங்கா, யஷ்வந்த்பூர், கோரமங்களா, மடிவாளா, ஆர்.ஆர்., நகர், பி.டி.எம்., லே - அவுட், எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களில் லேசாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இன்றும், பெங்களூரில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இது போன்று ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் பெய்த மழையால் நகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதில், 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சில மரங்கள் கார்களின் மீது விழுந்ததால், பல கார்கள் சேதம் அடைந்து உள்ளன. காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
அமெரிக்காவில் கார் மோதிய விபத்து; பட்டம் பெறச் சென்ற இந்திய மாணவி பரிதாப பலி
-
ஆந்திராவில் வெறுங்கால்களுடன் நடந்த பெண்கள்: ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய பவன் கல்யாண்
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு குறித்து ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது; முதல்வர் ஸ்டாலின்
-
ஆயுதங்களை கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை
-
யுபிஐ பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டியா மத்திய அரசு மறுப்பு
-
அடுத்த மாதம் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா