அரசை நடத்த முடியாது காங்., தலைவர் மிரட்டல்

தாவணகெரே : ''லிங்காயத் மற்றும் ஒக்கலிக சமுதாயத்தினரை பகைத்து கொண்டு, அரசு நடத்த முடியுமா,'' என காங்., மூத்த தலைவரும், அகில இந்திய வீரசைவ மஹாசபா தலைவருமான ஷாமனுார் சிவசங்கரப்பா கேள்வி எழுப்பினார்.

தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவில் லிங்காயத் மற்றும் ஒக்கலிக சமுதாயத்தினரை பகைத்து கொண்டு, அரசு நடத்துவீர்களா. இவ்விரு சமுதாயங்களின் கோபத்துக்கு ஆளானால், ஆட்சி நடத்த முடியாது.

மாநிலத்தில் வீரசைவ லிங்காயத் சமுதாயத்தினர், அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் ஒக்கலிக சமுதாயம் உள்ளது. தேவையின்றி ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதாக கூறுகின்றனர். ஒரு வேளை வெளியிட்டால், ஒக்கலிகர், லிங்காயத் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம். இது பற்றி நாங்கள் ஏற்கனவே, ஆலோசனை நடத்தினோம். எங்களை பகைத்து கொண்டு, எப்படி அரசு நடத்துவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement