ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

செஞ்சி, ; அனந்தபுரம்-பனமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பனமலை ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பாரதி சசிகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சம்பத் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் சேகர் வரவேற்றார். ஏ.டி.எஸ்.பி., தினகரன் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ரேட்டணை ஹோலி ஏஞ்சல் கல்வி குழும நிறுவனர் பழனியப்பன், விழுப்புரம் குமார்ஸ் கல்வி நிறுவனம் நிறுவனர் குமார், அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன், துணை தலைவர் அமுதா கல்யாண்குமார், பனமலை ஊராட்சி துணை தலைவர் சரசு தணிகாசலம் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சிறந்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சுஜாதா சேகர் நன்றி கூறினார்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு