பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து சிறுமி பலி

மூணாறு : இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் இருந்து நேற்று எர்ணாகுளத்திற்கு கேரள அரசு பஸ் சென்றது.

எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலம் அருகே மணியம்பாறை பகுதியில் காலை 11:00 மணிக்கு பஸ் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதில் கட்டப்பனை அருகே கீரித்தோடு பகுதியைச் சேர்ந்த பென்னி மகள் அனிட்டா 14, தூக்கி வீசப்பட்டு பஸ்சின் அடியில் சிக்கி இறந்தார். பஸ்சை தூக்கி சிறுமியின் உடலை மீட்டனர்.

டிரைவர், கண்டக்டர் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கோதமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement