பாலஸ்தீனம் மீதான தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் நாட்டினருக்கு தடை விதித்த மாலத்தீவு

மாலே: இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவுகள் தடை விதித்துள்ளது.



பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டில் நுழையக் கூடாது என்று தடை விதித்தன.


அந்த பட்டியலில் தற்போதும் மாலத்தீவுகளும் இணைந்துள்ளது. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டினர், மாலத்தீவுகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி அலுவலகம், பாலஸ்தீன நாட்டு மக்களின் உரிமைகளை மேம்படுத்த, பாதுகாப்பு அளிக்க மாலத்தீவுகள் அரசாங்கம் வலுவான உறுதிப்பாட்டை கொண்டுள்ளது என்று கூறி உள்ளது.

Advertisement