தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு

38

சென்னை: ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


தனியார் டிவிக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: கூட்டணிக்கு இன்னும் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதாவது தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மாற்று அரசாங்கம் வேண்டும். இதற்காக எந்த கட்சிகள் வந்தாலும் கூட்டணிக்கு சேர்த்து கொள்வோம். எல்லோரும் வர வேண்டும்.


தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஏன் முடியாது? மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன. சீமானை நான் கூட்டணிக்கு அழைக்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement