'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'

மும்பை: நாசிக் அருகே உள்ள மன்மாட் முதல் மும்பை வரை இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தியாவின் முதல் முறையாக ஏ.டி.எம்., இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்து ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை வெற்றி அடைந்தது.
ஏ.டி.எம்., இயந்திரம் ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது முதல் முறையாக, மத்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனை பெட்டியில் ஏ.டி.எம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்தது.
பெட்டியின் பின்புறத்தில், ஏற்கனவே தற்காலிக சரக்கு அறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் 22 பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருப்பதால் ஏ.டி.எம்., இயந்திரத்தை மக்கள் எளிதில் அணுக முடியும்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சோதனை வெற்றிகரமாக நடந்தது. சில இடங்களில் மட்டும் சிக்னல் பிரச்னை இருந்தது. இனி மக்கள் ஓடும் ரயிலில் பணம் எடுக்க முடியும். ஏ.டி.எம்., இயந்திரத்தின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்போம், என்றனர்.
இது குறித்து பயணிகள் கூறியதாவது: இது ஒரு நல்ல முயற்சி. அவசர தேவைக்கு பணம் எடுக்க இது மிகவும் உதவியாக இருக்கும், என்றனர். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் ரூட் மிகவும் பிரபலமானது. தினமும் ஏராளமான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.










மேலும்
-
தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!
-
போரல் - கே.எல்.ராகுல் ஜோடி நிதான ஆட்டம்; மெல்ல மெல்ல ரன் குவிக்கும் டில்லி