ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'

சென்னை: ''கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்'' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு சில கல்வி நிறுவனங்களின் பெயரில் ஜாதிப் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அந்த கல்வி நிறுவனம் வேன், கல்வி வளாகத்தில் இருக்கும் பெயர் பலகை உள்ளிட்டவையில் ஜாதி பெயருடன் கல்வி நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்நிலையில், ''கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்'' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு:
* ஜாதி பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என்று பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐ.ஜி., சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
* ஜாதி பெயர்களைத் திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என்று அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண்டும்.
* கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும்; இல்லையென்றால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
* அரசின் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் பெயர்களை, அரசுப்பள்ளி என மாற்ற வேண்டும்.
* பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். அவர்களின் ஜாதி பெயர் இருக்கக் கூடாது. இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.












மேலும்
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!
-
தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
-
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்
-
மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை; மாற்றவே கூட்டணி: நயினார் நாகேந்திரன்