சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் இன்று மகா கும்பாபிேஷகம்

புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள தட்சணாமூர்த்தி மற்றும் 18 சித்த பீடத்திற்கு இன்று காலை மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயர தட்சணாமூர்த்தி சுவாமி, 6 அடி உயரமுள்ள 18 சித்தர்கள், 27 நட்சத்திரம், 12 ராசி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்த குரு பீடத்திற்கு இன்று (16ம் தேதி) காலை மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
இதற்கான பூஜை நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் துவங்கி, அன்று மாலை முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து புதிய சுவாமிகளுக்கு கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து 2ம் கால யாக பூஜை, மாலை 3ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, சோடச உபசார பூஜைகள், மகா தீபாராதனை மற்றும் மங்கல ஆரத்தி நடந்தது.
இன்று (16ம் தேதி) காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு தட்சணாமூர்த்தி, 10:18 மணிக்கு 18 சித்தர்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:30 மணிக்கு அனைத்து குருமார்களுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது.
மேலும்
-
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு
-
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; சுப்ரீம்கோர்ட் விசாரணை துவக்கம்
-
வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி
-
'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி