விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
பாகூர், : புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கத்தில் விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா இன்று (16ம் தேதி) நடக்கிறது.
விநாயகா மிஷன்ஸ் குழும தலைவர் கணேசன் தலைமை தாங்குகிறார். முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
விநாயகா மிஷன்ஸ் குழும துணைத் தலைவர் அனுராதா கணேசன், முதன்மை வியூக அதிகாரி சுரேஷ் சாமுவேல், ஆறுபடை வீடு மருத்து வக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை தலைமை பிரதி தலைவர் தாமோதரன், விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் ஹரிசிவதாஸ் மேனன், ஜிப்மர் முன்னாள் இயக்குனர் விஷ்ணு பட், போபால் எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் சர்மான் சிங், துணை நிர்வாக பிரதி தலைவர் ராஜன் பங்கேற்கின்றனர்.
மருத்துவமனை இயக்குநர் ஹரி சிவதாஸ் மேனன் கூறுகையில், 'விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதுச்சேரி பிராந்திய முதல் கார்ப்ரேட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகும். அதிநவீன உள் கட்டமைப்பு மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இம்மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.
இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல், இரைப்பை குடல் மருத்துவம், எலும்பியல் மற்றும் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை, குழந்தை மருத்துவம், பச்சிளம் குழந்தைகள் கண்காணிப்பு பிரிவு, புற்று நோய் சிகிச்சை பிரிவு, புனரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவுகள் மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் வழி நடத்தப்படுகிறது' என்றார்.
மேலும்
-
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு
-
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; சுப்ரீம்கோர்ட் விசாரணை துவக்கம்
-
வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி
-
'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி