போலி ஆவண மோசடி ஒருவர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே போலி ஆவண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் சுப்பிரமணியன்,60; விவசாயி. இவர் அதே கிராமத்தில், 15 சென்ட் பரப்பு கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்திற்கு, கடந்த, 2015,ல் போலி ஆவணங்களை தயார் செய்தார்.

அதைக்கொண்டு, தம்பி முனியன் மகன் ஏழுமலை என்பவரிடம், அந்த இடத்தை விற்பனை செய்தார். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் விஜயன் புகார் அளித்தார். வடபொன்பரப்பி போலீசார், சுப்ரமணியனை கைது செய்தனர்.

Advertisement