வெள்ளரி விற்பனை ஜோர்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வெள்ளரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். அன்றாட தேவைக்கு வருவோரும் வெப்பம் தாங்காமல் பழச்சாறு, இளநீர், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த இயற்கை பானங்களை அருந்துகின்றனர்.

அதுபோல், விருத்தாசலத்தில் பாலக்கரை, ஆர்.டி.ஓ., அலுவலகம், அரசு மருத்துவமனை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரி விற்பனை அமோகமாக நடக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கையானது என்பதால் பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

கம்மாபுரம் வட்டாரம் சொட்டவனம், சிறுவரப்பூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி காய் மற்றும் பழங்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்கின்றனர். கிலோ 100 ரூபாய்க்கு அமோகமாக விற்பனையாகிறது.

Advertisement