ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

4


சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலக வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க., மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பெண்களையும், ஹிந்து மதத்தையும் மிகவும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு, அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


அந்த வகையில், 'பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, இன்று (ஏப்ரல் 16), சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க., மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்முடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement