ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி

3

செங்கல்பட்டு: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு நடைபெறும் என்று அன்புமணி கூறி உள்ளார்.



அண்மையில் பா.ம.க., தலைவர் அன்புமணியை கட்சி பதவியில் இருந்து அதன் நிறுவனர் ராமதாஸ் நீக்கினார். அவரின் இந்த நடவடிக்கை கட்சிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியது.


கட்சியின் பொருளாளர் திலகபாமா,அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து ராமதாசுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதற்கு பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பதிலடி தர, கட்சிக்குள் மேலும் சலசலப்பு அதிகமானது.


அதே நேரத்தில் கட்சியின் தலைவர் நான்தான் என்று அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இருவருக்கும் இடையேயான சலசலப்பு சரியாகிவிட்டது, இது ஒரு சாதாரண விஷயம் என்று கவுரவத் தலைவர் ஜி.கே. மணி விளக்கம் தந்தார்.


இந் நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு நடைபெறும் என்று அன்புமணி கூறி உள்ளார். மாநாடு நடைபெறும் திருவிடந்தையில் பந்தக்கால் நடும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது;


வருகின்ற மே மாதம் 11ம் தேதி மாமல்லபும் வட நெமிலி பகுதியில் திருவிடந்தையில் ராமதாஸ் வழிகாட்டுதலின் பேரில் சித்திரை நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது.


இந்த மாநாடு இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்கள், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள பின்தங்கிய சமுதாய மக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.


இவ்வாறு அன்புமணி கூறினார்.

Advertisement