மருத்துவமனையில் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குருகிராமில் அதிர்ச்சி சம்பவம்

குருகிராம்: குருகிராம் தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யு., வில் அனுமதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் மேதாந்தா என்னும் தனியார் மருத்துவமனையில் 46 வயது பெண் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கணவரிடம் கூறியநிலையில், தம்பதியர் இருவரும் போலீசிடம் புகார் அளித்தனர்.
சம்பவம் குறி்த்து குருகிராம் போலீஸ் செய்திதொடர்பாளர் கூறியதாவது:
விமானப்பணிப்பெண் சிகிச்சைக்காக,கடந்த ஏப்.5 ஆம் தேதி மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று சிகிச்சை முடிந்து விமானப்பணிப்பெண் வீடு திரும்பி உள்ளார். மறுநாள் புகார் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரில் தனக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதனால் தன்னால் எதுவும் பேசமுடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
லேசான மயக்கத்திலும் இருந்தேன் என்றும், அந்த சம்பவத்தின் போது தன்னைச் சுற்றி செவிலியர்களும் இருந்தனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான, சி.சி.டி.வி புட்டேஜை மருத்துவமனையிடம் பெற்றுள்ளோம். அதை ஆய்வு நடத்த அனுப்பி இருக்கிறோம்.
குற்றவாளி இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.










