மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!

2

சேலம்: சேலத்தில் காதல் விவகாரத்தில், மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் பின்னர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.


@1brஇதுபற்றிய விவரம் வருமாறு;


சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், அவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.


அடுத்த சில நிமிடங்களில் அந்த வாலிபர், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். அடுத்த நிமிடமே அதே கத்தியால் தமது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை கண்ட அங்குள்ளோர் அச்சம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கத்திக்குத்து விவரத்தை அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். விசாரணையில் கத்தியால் குத்தியவர் பெயர் மோகனபிரியன் என்பதும், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும், அந்த பெண், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி என்பதும் தெரியவந்தது.


இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபருக்கு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேரில் சந்தித்தபோது அந்த வாலிபரை மாணவிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, கத்திக்குத்தில் முடிந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement