சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மேடவாக்கத்தில் காலை 11 முதல் 12 மணி வரை ஒரு மணி நேரத்தில் 127 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் அம்பத்தூர், பாடி, மதுரவாயல், போரூர், வானகரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புறநகரில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னை மேடவாக்கத்தில் காலை 11 முதல் 12 மணி வரை ஒரு மணி நேரத்தில் 127 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேடவாக்கம்- 127
வளசரவாக்கம்- 75
நெற்குன்றம்- 72
சாலிகிராம்- 72
அண்ணாமலைபுரம்- 73
பாரிமுனை- 70
விமான சேவை பாதிப்பு
சென்னையில் பெய்த திடீர் கனமழை மற்றும் மோசமான வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருவுக்கு திரும்பியது. மேலும் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
16 ஏப்,2025 - 15:39 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மக்களுக்கு கஷ்டமான சூழ்நிலை; மாற்றவே கூட்டணி: நயினார் நாகேந்திரன்
-
நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்
-
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை
-
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
-
டாஸ்மாக் லஞ்சத்தின் சங்கிலித் தொடர் பின்னணி அறிந்து கொள்ள வேண்டாமா; அமலாக்கத்துறை தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்
-
காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும்; ராகுல் பேச்சு
Advertisement
Advertisement